ரஜினிகாந்த் எதிர்ப்பதால் படத்தின் தலைப்பை மாற்றுகிறேன் – பைசல் அறிவிப்பு!…

சென்னை:-‘மெய்ன் ஹுன் ரஜினிகாந்த்’ என்ற தலைப்பில் இந்தியில் படம் தயாராகியுள்ளது. படப்பிடிப்பும் முடிந்துள்ளது.இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி மெய்ன் ஹுன் என்ற தலைப்பில் படம் எடுக்கக்கூடாது என்று ரஜினி எதிர்த்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் சமுதாயத்தில் தனக்கு நல்ல பெயர் உள்ளது. ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். என்னிடம் அனுமதி பெறாமல் என் பெயரை தலைப்பாக வைத்து படம் எடுக்கின்றனர்.

விலை மாது, செக்ஸ் என்றெல்லாம் படத்துக்கு விளம்பரபடுத்தப்பட்டு உள்ளது. இது சமூகத்தில் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து படத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ரஜினிகாந்தை இழிவுபடுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை என்றும் ரஜினி வாழ்க்கைக்கும் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் டைரக்டர் விளக்கம் அளித்தார். ரஜினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் படத்தின் பிரத்யேக காட்சியை திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்தார்.
ஆனால் ரஜினியும், குடும்பத்தினரும் படம் பார்க்க வரவில்லை. ரஜினியின் வக்கீல் மட்டுமே படத்தை பார்த்தார். இந்நிலையில் படத்தின் தலைப்பை மாற்ற டைரக்டர் பைசல் முன் வந்துள்ளார். அவர் கூறியதாவது:

மெய்ன் ஹுன் ரஜினிகாந்த் படத்தில் தயாரிப்பாளர் நிறைய முதலீடு செய்துள்ளார். படத்தை வருகிற 17ம் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளோம். படம் வெளிவராவிட்டால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் எனவே மெய்ன் ஹுன் ரஜினிகாந்த் தலைப்பை மெய்ன்ஹுன் ரஜினி என்று மாற்ற முடிவு செய்துள்ளோம். ரஜினி மனதை புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago