நடிகையாகும் சூர்யா-ஜோதிகாவின் மகள்!…

சென்னை:-சூர்யா–ஜோதிகா நடித்த சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சுட்டிப் பொண்ணாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர் ஸ்ரேயா சர்மா. இவர் இப்போது ஹீரோயினாக மாறிவிட்டார். தெலுங்கில், காயக்கடு என்ற படத்தில் அலி ரெஸா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடந்தது. அதில் அழகு பதுமையாக தோன்றினார் ஸ்ரேயா சர்மா. மேலும் காயக்கடு படத்தின் ஸ்டில்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தமிழில் சில்லுன்னு ஒரு காதல் தவிர்த்து எந்திரன், நீ தானே என் பொன் வசந்தம் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும், டி.வி., சீரியல்களிலும், ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். 2006-ல், ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிக்கும் போது ஸ்ரேயா சர்மாவுக்கு வயது 9, தற்போது 17 வயதில் பருவமங்கையாய் ஹீரோயினாக மாறியிருக்கிறார் ஸ்ரேயா சர்மா. மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது தேசிய விருதும் வாங்கியிருக்கிறார்.
நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் தமிழிலும் நடிப்பேன் என்று கூறுகிறார் ஸ்ரேயா சர்மா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago