அதற்கு முன்பே நாயகி அனாமிகாவை பார்த்திருக்கும் அஸ்வினுக்கு அவள் மீது ஒருதலையாக காதல். அவளுடைய வீட்டுக்கு செல்லும் நாயகன் அவளை நோட்டமிடுவதை யுக்திவேல் பார்த்துவிடுகிறாள். ஒருகட்டத்தில் பேயக்காவிற்கு யுக்திவேலின் அண்ணன் இடையூறாக இருக்கிறார். அதனால் தனது அண்ணனையே கொன்றுவிடுகிறார் யுக்திவேல்.இது எதுவுமே தெரியாத நாயகி தந்தை இழந்த சோகத்தில் பரிதவிக்கிறார். இதற்கிடையில், அஸ்வின் நாயகி மீது வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தை வைத்து தனது காரியத்தை சாதித்துக் கொள்ள துடிக்கிறார் யுக்திவேல். அதன்படி, அவளை திருமணம் செய்து கொடுக்கிறேன் என்று அஸ்வினுக்கு ஆசை காட்டி தனது எதிரிகளை கொலை செய்யச் சொல்கிறார் யுக்திவேல்.
அவள்மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் யுக்திவேல் சொன்ன வேலைகளை செய்துமுடிக்கிறான் அஸ்வின். இதனால் அஸ்வினை கைது செய்ய போலீஸ் தேடுகிறது. போலீசின் பிடியில் சிக்காமல் தப்பித்து ஓடுகிறான் அஸ்வின். இதற்கிடையில் அஸ்வின் போலீசில் மாட்டிக்கொண்டால் தான் சிக்கிக் கொள்வோம் என்று அவனை கொலை செய்ய ஆளை ஏவி விடுகிறார் யுக்திவேல்.இறுதியில் அஸ்வின் போலீசில் மாட்டிக் கொண்டானா? யுக்திவேலின் ஆட்களால் கொல்லப்பட்டனா? அஸ்வின்-அனாமிகா காதல் என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகன் அஸ்வின் ராஜூக்கு நடிப்பு என்பதே சுத்தமாக வரவில்லை. காதல், சோகம், கோபம் என அனைத்துக்கும் ஒரேவிதமான முகத்தோற்றத்தையை காட்டி ரசிகர்களை கடுப்பேத்தியிருக்கிறார். இறுதிக்காட்சிகளில் ஓரளவு நடிக்க முயற்சி செய்துள்ளார்.நாயகி அனாமிகா அழகாக இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் சுமாராக இருக்கிறது. பாடல் காட்சிகளில்தான் மிகையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் பேயக்கா கதாபாத்திரத்தில் வரும் மீனாவின் நடிப்பு பலே. அந்த வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். வில்லனாக வரும் யுக்திவேல் பார்வையாலேயே மிரட்டுகிறார். ஆனால், இவர் முகத்தில் நடிப்பு வர பயப்படுகிறது.இயக்குனர் சஞ்சீவ் சீனிவாஸ் இந்த படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பது யாருக்கும் புரியவில்லை. படத்திற்கு தேவையில்லாத கதாபாத்திரங்களை உள் நுழைத்து படத்தின் கதையை குழப்பியிருக்கிறார். பிற்பாதி முழுக்க முழுக்க ரொம்பவும் இழுவையாக கொண்டு சென்றிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.அழகர் பொன்ராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. படத்திற்கு இவரது பாடல்கள் கொஞ்சம் பலத்தை கொடுத்துள்ளது. பின்னணி இசை பரவாயில்லை. சபீர்கான் ஒளிப்பதிவு பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை படமாக்கியது அருமை.
மொத்தத்தில் ‘நான் பொன்னொன்று கண்டேன்’ காதல்………..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே