‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு!…

சென்னை:-சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளன.புதிய கூட்டணிகளை உருவாக்கவும் தயார் ஆகின்றன. வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர் முகாம்களில் இருக்கும் கட்சிகள் கை கோர்க்கலாம். புது கட்சிகளும் தலை தூக்கலாம் என்கின்றனர். அரசியல் நோக்கர்கள். இந்த நிலையில ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்பதிலும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் அரசியலில் ஈடுபட இது தகுந்த நேரம் என்றும் எனவே கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் ஆந்திர பத்திரிகைகளும் இணைய தளங்களும் செய்திகள் வெயிட்ட வண்ணம் உள்ளன.

ரஜினிக்கு ஏற்கனவே அரசியல் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் இருக்கிறது. 1996–ல் திமு.க. தமிழ் மாநில கூட்டணியை உருவாக்கினார். அந்த அணி சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. 1998 தேர்தலிலும் அதே கூட்டணியை ஆதரித்தார்.2004 பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க. வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது தனிக்கட்சி துவங்கி அரசியலில் குதிப்பார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இறங்கவில்லை. மாறாக பாரதீய ஜனதாவை ஆதரித்து ஓட்டு கேட்டார். அதன் பிறகு எல்லா தேர்தல்களிலும் நடுநிலை வகித்தார். எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க வில்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரஜினியை பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். இதையடுத்து பாரதீய ஜனதாவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழக பாரதீய ஜனதா தலைவர்களும் ரஜினி தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆனால் ரஜினி அமைதியாக இருந்து விட்டார்.தற்போது அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்க்க மீண்டும் முயற்சிகள் டெல்லி தலைவர்கள் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்த்தால் தமிழகத்தில் கட்சியை வலுவாக்கிவிடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். ரஜினி ஏற்பாரா என்பது உறுதியாக தெரிய வில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago