‘ஐ’ படம் ரூ.5000 கோடி சம்பாதிக்குமாம்!…

சென்னை:-தலைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டு விடாதீர்கள், ஏற்கெனவே உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் படத்தை வெளியிட உள்ளோம் என்று சொன்ன படத்தின் தயாரிப்பாளர்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஐ படத்தின் டீஸர், சில காட்சிகள் ஆகியவற்றை ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் கம்பெனிக்கு போட்டுக் காட்டினாராம். அவற்றைப் பார்த்து அவர்கள் மிரண்டு போனார்களாம்.

அவர்களைப் போன்ற ஒரு பிரபலமான நிறுவனம் ஐ படத்தை உலகம் முழுவதும் வெளியிட்டால் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் தகுதி ஐ படத்திற்கு உண்டு என்கிறார்.இந்தியத் திரையுலகம் ஐ படத்திற்கு முன், ஐ படத்திற்குப் பின் என பிரிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்தப் படத்திற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உழைத்திருக்கிறார்கள். உலகமே இந்திய சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும், இயக்குனர் ஷங்கரை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்று சொல்வார்கள். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள்.

இப்போதே அறுபது சதவீதத்திற்கும் மேலானவர்களை இந்தப் படம் சென்றடைந்துவிட்டது. அவர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்கள், ஆந்திராவிலும் இதே நிலைமைதான்.
ஐ படத்தை உலகில் உள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறோம், அதற்கான வலிமை படத்திற்கு உண்டு. ஷங்கர் மற்றும் அவரது குழுவினரின் இந்த முயற்சிகளுக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம், என்று படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago