ஷங்கர் படத்தில் நடிக்க முயற்சி எடுக்கும் நடிகை சமந்தா!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல், ஷங்கர் இயக்கிய ஐ படங்களில் நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.ஆனால், கடல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது தோல் அலர்ஜி நோய் தாக்கியது. அதனால் அந்த படத்திலிருந்தே வெளியேறிய சமந்தா, சிகிச்சையில் இறங்கினார். அதன் காரணமாக, ஷங்கருக்கும் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. அதனால் எமிஜாக்சனை புக் பண்ணி படப்பிடிப்பை தொடங்கினார்.

இதனால் சமந்தாவுக்கு பெரிய அதிர்ச்சியாகி விட்டது. இருப்பினும், எப்படியாவது தெலுங்கைப் போலவே தமிழிலும் முன்னணி இடத்தை பிடிப்பேன் எனறு மனதில் வைராக்கியம் கொண்டவர், அஞ்சான், கத்தி படங்களில் கமிட்டானார். இதில் அஞ்சான் சமந்தாவை ஏமாற்றி விட்டது. இருப்பினும், தற்போது விஜய்யின் கத்தி படத்தை அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கத்தி ஹிட்டடித்து தமிழ் சினிமாவிலும் தெலுங்கைப் போலவே தன்னை நம்பிக்கை நாயகியாக்கும் என்று எதிர்பார்க்கும் சமந்தா, இதே வேகத்தில் டைரக்டர் ஷங்கரை சந்தித்து, அடுத்து அவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கான முயற்சியிலும் இறங்கப் போகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: