யாருமேயில்லாமல் தனியாக வாழ்ந்து கொண்டிருந்த குமரேசனுடன், அனுமந்தன் வந்து சேர்ந்ததும் இருவரும் இணை பிரியாமல் சுற்றி வருகிறார்கள். இதற்கிடையில், தப்பிச் சென்ற சிறுவனை காப்பகத்தின் உரிமையாளர் உதயகுமாரின் ஆட்கள் தேடி அலைகிறார்கள். அப்போது குமரேசனிடம்தான் அவன் இருக்கிறான் என்பதை அறிந்ததும், குமரேசனின் காரை எடுத்து வைத்துக் கொண்டு, சிறுவனை தங்களிடம் ஒப்படைத்தால் காரை ஒப்படைப்பதாக மிரட்டுகின்றனர். கார் மீது மிகுந்த பாசம் கொண்ட குமரேசன், காருக்காக அந்த சிறுவனை அவர்களிடம் ஒப்படைக்கிறான். பின்னர் அவர்களிடமிருந்து காரை வாங்கிக் கொண்டு சிறுவனை மீட்க அவர்களை பின்தொடர்ந்து விரட்டி செல்கிறான். அப்போது குமரேசனின் கார் விபத்தில் சிக்கி விடுகிறது.இறுதியில் குமரேசன் அந்த சிறுவனை மீட்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
மலேசியாவில் வாழும் தமிழர்கள் முழுக்க முழுக்க மலேசியாவில் படமெடுத்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள். படத்தின் நாயகனாக வரும் குமரேசனே இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். புதுமுகம் என்றாலும் நடிப்பில் ஓரளவுக்கு தேறியிருக்கிறார். சிறுவனிடம் பாசம் காட்டும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகிகளாக புன்னகை பூ கீதா, ஷைலா நாயர் இருவருக்குமே குறைவான அளவு காட்சிகள்தான். அதையும் நிறைவாக செய்திருக்கிறார்கள். ஷைலா நாயர் சண்டைக் காட்சியிலும் நடித்து அசத்தியிருக்கிறார். சிறுவன் ஹனுமந்தன் நடிப்பும் மெச்சும்படியாக இருக்கிறது. படத்தில் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. முழுக்க முழுக்க மலேசியாவிலேயே எடுக்கப்பட்ட படம் என்றாலும் அதிநவீன கேமராக்களை வைத்து படமாக்கியது சிறப்பு.
மொத்தத்தில் ‘மைந்தன்’ வீரன்…………
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே