அகத்தியன் படத்திலிருந்து ஓட்டம் பிடித்த நடிகை ஓவியா!…

சென்னை:-கேரளா திருச்சூரைச்சேர்ந்த ஹெலன்தான் நடிகை ஓவியா. அவரை தமிழுக்கு கொண்டு வந்து கதாநாயகி ஆக்கினார் டைரக்டர் சற்குணம். ஆனால் களவாணி படம் மெகா ஹிட்டானபோதும் அதன்பிறகு சரியான படங்களை தேர்வு செய்யத் தெரியாமல் சில படங்களில் கமிட்டானார் ஓவியா. அந்த படங்கள் திரைக்கு வராமல் போனதோடு ஓவியாவின் மார்க்கெட்டை கவிழ்த்து விட்டன.

தொடர்ந்து போராடிய ஓவியா, சுந்தர்.சியின. கலகலப்பு படத்தில் அயிட்டம் நடிகை போன்று அஞ்சலியுடன் இணைந்து கவர்ச்சிக்கோதாவில் குதித்தார். அதிலிருந்து அவ்வப்போது ஒரு படத்தில் நடித்தபடி தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு வருகிறார். தற்போது சீனி, சண்டமாருதம் ஆகிய படங்களில நடித்து வருகிறார்.இந்நிலையில், பாரதிராஜா தயாரிப்பில், அகத்தியன் இயக்கி வரும் படத்திலும் ஒரு வேடத்தில் நடிக்க கமிட்டானார் ஓவியா. ஆனால், அந்த படத்தின் நாயகியாக டைரக்டர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமியே பின்னர் ஒப்பந்தம் ஆனதால் அதிர்ச்சியாகி விட்டாராம் ஓவியா.

மற்ற நடிகைகள் ஹீரோயின் என்றாலும தனக்கு ஓரளவு நடிக்க சான்ஸ் தருவார்கள். ஆனால் இப்போது டைரக்டரின் மகளே கதாநாயகி என்கிறபோது நமக்கு நடிக்க காட்சிகளே இருக்காது. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை போன்று தன்னை ஓரங்கட்டி விடுவார்கள் எனறு உஷாராகி விட்ட ஓவியா, இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர் பின்னர் அப்படத்திலிருந்தே விலகி விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago