தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில், பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரமுகர்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் கூறுகையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘கத்தி’ படத்தை, இலங்கை அதிபர் ராஜபக்சேயின் குடும்ப நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. தமிழர்களின் விரோதியான ராஜபக்சேயின் குடும்ப நிறுவனம் தயாரிக்கும் படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம். நடிகர் விஜய்யோ, இயக்குனர் முருகதாசோ, இந்த படத்தை தயாரித்து வெளியிடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இந்த படம் வெளிவருவதை எங்கள் கூட்டமைப்பு அனுமதிக்காது.
மேலும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம். எங்கள் கூட்டமைப்பில் 150-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் உள்ளன. சில கட்சிகளும் எங்கள் அமைப்பில் உள்ளன. ‘கத்தி’ படம் வெளிவருவதை எதிர்க்கும் வகையில், எங்கள் அமைப்பு சார்பில் மாபெரும் போராட்டம், சென்னையில் நடத்தப்படும். இதுதொடர்பாக எங்கள் அமைப்பில் உள்ள இயக்கங்களின் தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றார். இதனிடையே தமிழர் அமைப்புக்களின் பகிரங்க எதிர்ப்பு காரணமாக கத்தி ஆடியோ விழாவிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர். வெளி ஆட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நான் ஈ சுதீப் கலந்து கொள்ள உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே