கோலிவுட் ஹீரோக்களின் பேவரிட் ஹீரோயினியான நடிகை நயன்தாரா!…

சென்னை:-நயன்தாராவுடன் காதல் முறிந்து பிரிந்திருந்த சிம்பு மீண்டும் அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இது நம்ம ஆளு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதோடு, மறுபடியும் நட்பு வளர்த்து வருபவர், அவருடன் ஜோடி போட்டுக்கொண்டு சினிமா தியேட்டர்களுக்கும் விஜயம் செய்து வருகிறார். அவரைத் தொடர்ந்து, தனிஒருவன் படத்தில் நடிக்கும் ஜெயம்ரவி, நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. எப்போதோ நிறைவேற வேண்டிய அது இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது என்று உற்சாகம் பொங்க சொல்கிறார்.

அதற்கடுத்தபடியாக உதயநிதி, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலேயே நயன்தாராவிடம்தான் கால்சீட் கேட்டேன் அப்போது அவர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொன்னதால்தான் ஹன்சிகாவை புக் பண்ணினேன் என்கிறார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாரா உறவில் விரிசல் விழுந்ததால், இது கதிர்வேலன் காதல் படத்துக்கு நயன்தாராவை புக் பண்ணி டூயட் பாடியவர், இப்போது நண்பேன்டா படத்திற்கும் நயன்தாராவையே ஒப்பந்தம் செய்து நடித்துக்கொண்டு வருகிறார். நயன்தாராவுடன் மீண்டும் நடிக்கும் ஆசையில்தான் முதலில் அப்படத்துக்கு புக் பண்ணியிருநத காஜல் அகர்வாலையே கழட்டி விட்டார் உதயநிதி.

அதேபோல், இப்போதைய சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியில் இருந்து அனைவருமே நயன்தாராவுடன் நடிப்பதில் அளவற்ற ஆசையில்தான் இருக்கிறார்கள். அதனால் தெலுங்கு சினிமாவில் தான் நடிக்க ஓராண்டு ரெட் கார்டு விழுந்து விட்டதை நினைத்து பீல் பண்ணிக்கொண்டிருந்த நயன்தாரா, தமிழ் சினிமா ஹீரோக்களிடம் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த வரவேற்பைக்கண்டு சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago