அந்த திருமணத்தில் அஞ்சலியை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள்மீது காதல்வயப்பட்டு விடுகிறார். அவளையே சுற்றி சுற்றி வருகிறார். ஒருகட்டத்தில் தனது காதலை அவளிடம் சொல்கிறார். அவளும் அந்த காதலை ஏற்றுக் கொள்கிறாள்.இருவரும் காதலிக்கும் விஷயம் அஞ்சலியின் அண்ணன் சிவராஜுக்கு தெரிய வருகிறது. அஞ்சலியை அடித்து கண்டிக்கிறான். இதையறிந்த வானவராயன் அஞ்சலியின் வீட்டுக்கு இரவோடு இரவாக சென்று அவளை சந்திக்கிறான்.இருவரும் தனிமையில் சந்தித்து பேசும்போது ஊர்க்காரர்கள் திரண்டு வரும் சத்தத்தை கேட்டு இருவரும் ஓடுகிறார்கள். இருவரும் ஊரைவிட்டுத்தான் ஓடுகிறார்கள் என்று தவறாக புரிந்துகொண்ட ஊர்க்காரர்கள் அவர்களை சுற்றி வளைக்கின்றனர். வானவராயனை அடித்து அந்த ஊரை விட்டே அனுப்புகிறார்கள்.இந்நிலையில் அஞ்சலியின் அப்பாவான வேலு நாயக்கர் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார். வந்ததும் வீட்டில் நடந்த விஷயங்களை கேட்டறிந்த வேலு நாயக்கர், தனது மகளை சமாதானப்படுத்தும் விதமாக வானவராயனையே அவளுக்கு திருமணம் செய்துவைப்பதாக கூறுகிறார்.
இதற்கிடையில், தனது அண்ணன் வானவராயனை அடித்து அவமானப்படுத்தியதால் அஞ்சலி குடும்பத்தை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்த வல்லவராயன் குடித்துவிட்டு அஞ்சலியின் வீட்டுக்கு சென்று அவளது அப்பா மற்றும் அவளது குடும்பத்தாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்துகிறான்.இதனால் கோபமடைந்த வேலு நாயக்கர் தனது மகளை வானவராயனுக்கு திருமணம் செய்து கொடுக்கமாட்டேன் என்று உறுதி எடுக்கிறார். இருந்தாலும் வானவராயன் நினைவாகவே இருந்து வருகிறாள் அஞ்சலி. ஒருகட்டத்தில் தன் தவறை உணர்ந்த வல்லவராயனும் வேலுநாயக்கரை சமாதானம் செய்ய எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகிறது.இறுதியில், வேலுநாயக்கரை சமாதனம் செய்து வானவராயன்-அஞ்சலி காதலில் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.வானவராயன் வல்லவராயனுமாக வரும் கிருஷ்ணாவும், மா.கா.பா.ஆனந்தும் படம் முழுக்க செய்யும் சேட்டைகள் தாங்க முடியவில்லை. அண்ணனுக்காக எதையும் செய்யக்கூடிய தம்பியாக நம் கண்முன்னே நிற்கிறார் மா.கா.பா. ஆனந்த். அறிமுக படத்திலேயே அசத்தலாக நடித்து இருக்கிறார். கிருஷ்ணாவுக்கு ரொம்ப ஜாலியான கதாபாத்திரம். அதை செவ்வனே செய்திருக்கிறார்.
அஞ்சலியாக வரும் மோனல் கஜ்ஜார் திரையில் அழகாக பளிச்சிடுகிறார். கிராமத்து பெண் வேடத்துக்குத்தான் சரியாக பொருந்தவில்லை. நடிப்பிலும் கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும்.
நாயகியின் அண்ணனாக வரும் எஸ்.பி.சரணுக்கு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். கண்டிப்பான அண்ணனாக மனதில் பதிகிறார். தம்பி ராமையா, கோவை சரளா வரும் காட்சிகள் கலகலக்க வைக்கின்றன. கோவை தமிழில் இருவரும் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் பாசக்கார அப்பாவாக பளிச்சிடுகிறார்.படத்தில் 15 நிமிட காட்சிகளில் சந்தானம் வருகிறார். இவர் வரும் அந்த 15 நிமிடத்தையும் கலகலப்பாக்கிவிட்டு போயிருக்கிறார்.குடும்ப பின்னணியில் ஒரு காதல் கதையை காமெடி, சென்டிமெண்ட் கலந்து சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் ராஜமோகன். காமெடி ஓரளவுக்கு இருந்தாலும் படத்தில் சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாக, நாயகியின் அப்பாவை அவமானப்படுத்தும் காட்சிகள் ரொம்பவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது. மற்றபடி பார்த்தால் படத்தை கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர்.யுவன்சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்கள் அருமை. மற்ற பாடல்கள் சுமார் ரகம். பழனிகுமார் ஒளிப்பதிவில் பொள்ளாச்சி அழகை அழகாக படமாக்கியிருப்பது குளுமை.
மொத்தத்தில் ‘வானவராயன் வல்லவராயன்’ அதிரடி காதல்………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே