தி நவம்பர் மேன் (2014) திரை விமர்சனம்…

சி.ஐ.ஏ.வின் ஏஜெண்டுகளில் முதலிடத்தில் உள்ள பியர்ஸ் பிராஸ்னன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் சுவிட்சர்லாந்து நாட்டில் தனது வாழ்க்கையை அமைதியாக கழித்து வருகிறார். பிராஸ்னன் ஓய்வை நிம்மதியை கழித்து வரும் வேலையில் அவரது பழைய தலைவரான பில் ஸ்மிட்ரோவிச் முக்கியமான பணி ஒன்றுக்காக திரும்பவும் பணிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறார்.பில்லின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்புகையில் ரஷ்ய அதிபரான லசார் ரிஸ்டோவ்ஸ்கியிடம் பணியாளராக உள்ள சி.ஐ.ஏ.வின் பெண் ஏஜெண்ட்டை மீட்டு வரும் முக்கிய பொறுப்பு ப்ரோசனிடம் வழங்கப்படுகிறது.

காம வெறியனும், செச்சன்யா மீது போர் தொடுத்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று தனது வெறியாட்டத்தை காண்பித்தவருமான லசாரின் கொடூரங்கள் பற்றி தெரிந்து வைத்துள்ள அப்பெண்ணை ரஷ்ய அதிபரிடம் இருந்து காப்பாற்ற நினைக்கையில் அவளை சர்வதேச அளவில் மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்படும் கும்பல் கடத்துகிறது.இதற்கு என்ன காரணம் என்பது பிராஸ்னனுக்கு தெரிய வருகிறது. சி.ஐ.ஏ.வில் உள்ள கறுப்பு ஆடுகள் உதவியால் தான் அவள் கடத்தப்பட்டாள் என்பது தெரிகிறது. அவளை கடத்தியது யார் என்றும், அவள் எங்கிருக்கிறாள் என்பதும் சமூக ஆர்வலரான ஒல்கா குரிலெங்கோவுக்கு தான் தெரியும்.அப்பெண் இருக்குமிடத்தை பிராஸ்னனிடம் ஒல்கா தெரிவித்தாளா? கொடூர அதிபரான லசாரின் நடவடிக்கைகள் உலக மக்களுக்கு தெரிந்ததா? என்பதே மீதி கதை.இப்படத்தில் கதாநாயனாக நடித்துள்ள பிராஸ்னன் ஆக்ரோஷ காட்சிகளில் சீறிப் பாய்ந்திருக்கிறார். அவருக்கும் வில்லன் லுக் ப்ரேசியாவிற்கும் நடைபெறும் சண்டை காட்சி விறுவிறுப்பாக அமைந்துள்ளது.

ரஷ்ய அதிபராக நடித்துள்ள லசாரின் நடிப்பு அற்புதம். ரஷ்ய அதிபரின் வேலையாளாக உள்ள சி.ஐ.ஏ.ஏஜென்டாக வரும் மெடிஹா முஸ்லியோவும் நன்றாக நடித்துள்ளார்.இப்படத்தில் வன்முறை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக குழந்தையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அக்குழந்தையின் நெஞ்சில் குண்டு பாயும் காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது. ஒரு சில காட்சிகளில் ஆடைகளே இல்லாமல் பின்னணியில் நிர்வாணமாக பெண்கள் நடந்து போவது தெரிகிறது.
பில் க்ராங்கிரின் தேர் ஆர் நோ ஸ்பைஸ் என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனரான ரோஜர் டொனால்ட்சன்னின் திறமை பல்வேறு இடங்கிளில் பளிச்சிடுகிறது. இசையமைப்பாளர் மார்கோ பெல்ட்ராமியின் இடத்திற்கு தகுந்தாற்போல் இசை அமைத்துள்ளார்.

மொத்தத்தில் ‘தி நவம்பர் மேன்’ அதிரடி………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago