நாயகனாக அறிமுகமாகும் நாகார்ஜுனா – அமலா மகன் அகில்!…

சென்னை:-1980களில் தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்த அமலா, பின்னர் தெலுங்குப் படங்களில் நாயகியாக நடித்த போது அங்குள்ள முன்னணி நடிகரான நாகார்ஜுனாவைக் காதல் திருமணம் செய்து கொண்டு நடிப்பிலிருந்து விலகினார். அவர்களுக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் குழந்தையாக இருந்த போதே தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்த ‘சுட்டிக் குழந்தை’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது டீன் ஏஜ் வயதைக் கடந்துள்ள அகில், சமீபத்தில் 100 நாட்களைக் கடந்த ‘மனம்’ படத்தில் ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அதுவே அவருக்கு பலத்த வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அகிலும் விரைவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதற்கான கதைகளை அகிலும், அவருடைய அப்பா நாகார்ஜுனாவும் கேட்டு வந்தார்கள்.நல்ல கதையில் அறிமுகமாக வேண்டும் என்று இருந்த அவர்களுக்கு பிரபல இயக்குனரான வி.வி.விநாயக் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். அதனால், அவர் சொன்ன கதையை படமாக்கலாம் என முடிவு செய்துள்ளார்களாம். வரும் 20ம் தேதி நாகார்ஜுனாவின் அப்பாவான அக்கினேனி நாகேஸ்வரராவின் பிறந்தநாள் வரவுள்ளது.

அன்று அகில் நடிக்க உள்ள அறிமுகப் படத்தின் துவக்க விழா நடைபெறும் என்று டோலிவுட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா அங்கு முன்னணி நடிகராக உள்ளார். தற்போது அகிலும் நாயகனாக அறிமுகமானால் தாத்தா, மகன், பேரன்கள் என மூன்று தலைமுறையாக தெலுங்குத் திரையுலகில் இருக்கும் குடும்பம் என்ற பெயர் ‘அக்கினேனி’ குடும்பத்திற்குக் கிடைக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago