தற்போது டீன் ஏஜ் வயதைக் கடந்துள்ள அகில், சமீபத்தில் 100 நாட்களைக் கடந்த ‘மனம்’ படத்தில் ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அதுவே அவருக்கு பலத்த வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அகிலும் விரைவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதற்கான கதைகளை அகிலும், அவருடைய அப்பா நாகார்ஜுனாவும் கேட்டு வந்தார்கள்.நல்ல கதையில் அறிமுகமாக வேண்டும் என்று இருந்த அவர்களுக்கு பிரபல இயக்குனரான வி.வி.விநாயக் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். அதனால், அவர் சொன்ன கதையை படமாக்கலாம் என முடிவு செய்துள்ளார்களாம். வரும் 20ம் தேதி நாகார்ஜுனாவின் அப்பாவான அக்கினேனி நாகேஸ்வரராவின் பிறந்தநாள் வரவுள்ளது.
அன்று அகில் நடிக்க உள்ள அறிமுகப் படத்தின் துவக்க விழா நடைபெறும் என்று டோலிவுட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா அங்கு முன்னணி நடிகராக உள்ளார். தற்போது அகிலும் நாயகனாக அறிமுகமானால் தாத்தா, மகன், பேரன்கள் என மூன்று தலைமுறையாக தெலுங்குத் திரையுலகில் இருக்கும் குடும்பம் என்ற பெயர் ‘அக்கினேனி’ குடும்பத்திற்குக் கிடைக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே