முத்தரப்பு தொடர்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே!…

ஹராரே:-ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முத்தரப்பு தொடரின் நான்காவது ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பிஞ்ச்சும் ஹியூசும் களமிறங்கினர். இருவரும் ஜிம்பாப்வே வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். போட்டியின் 4வது ஓவரில் 11 ரன்கள் எடுத்திருந்த பிஞ்ச் அவுட்டாக கேப்டன் கிளார்க் களமிறங்கினார். மிகவும் நிதானமாக விளையாட தொடங்கியது ஹியூஸ்-கிளார்க் ஜோடி. எனினும் சிறிது நேரத்திலேயே ஹியூசும் 10 ரன்னில் நடையை கட்டினார். இதையடுத்து களமிறங்கிய பெய்லி வந்த வேகத்திலேயே 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து களமிறங்கிய மேக்ஸவெல், மார்ஷ் ஆகியோர் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். மேலும் ஒரு அதிர்ச்சியாக தசைப்பிடிப்பு காரணமாக கிளார்க்கும் ரிட்டயர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஹாடின் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். 10 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கட்டிங் மட்டும் 26 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் குவிக்க முடிந்தது.
வெற்றிக்கு 210 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மாவோயோ, ராசா களமிறங்கினார். இருவரும் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் பந்துகளை சந்திக்க திணறியது போலவே திணறினார்கள். போட்டியின் 12வது ஓவரில் 22 ரன்னில் ராசா அவுட்டாக மசக்கட்சா களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே மாவோயோ 15 ரன்னில் அவுட்டாக டெய்லர் களமிறங்கினார். டெய்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மஸ்கட்சா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அணியின் ஸ்கோர் 100 ஆக இருந்தபோது மஸ்கட்சா அவுட்டாக வாலர் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே டெய்லரும் 32 ரன்னில் நடையை கட்ட வில்லியம்ஸ் களமிறங்கினார். வந்த வேகத்திலேயே வில்லியம்ஸ் பெவிலியன் திரும்ப கேப்டன் சிகும்புரா களமிறங்கினார். ஆரம்பம் முதலே சிகும்புரா அடித்து ஆடத் துவங்கிய நிலையில் வாலரும் 11 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த டிரிபானோ 3 ரன்னில் அவுட்டாக உட்சேயா சிகும்புராவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி 31 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை தங்கள் அணி வீழ்த்த காரணமாக இருந்தனர். இறுதியில் 48வது ஓவரிலேயே 7 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
52 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிகும்புரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலியா அணியை 31 ஆண்டுகளுக்கு பின் ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago