சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1978ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. இப்படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி ரீமேக் செய்து இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில்தான் ஸ்ரீதேவி நடித்துள்ள கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மனோஜ் பாரதி சில படங்களில் நாயகனாகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். சமீபத்தில் அப்பா பாரதிராஜா இயக்கத்தில் வந்த ‘அன்னக்கொடி’ படத்தில் கூட வில்லனாக நடித்தார். ஆனால், அவரால் ஒரு நடிகராக பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. அவர் நடிக்க வருவதற்கு முன் இயக்குனர் மணிரத்னத்திடம் சில காலம் உதவியாளராகப் பணியாற்றினார்.நீண்ட நாட்களாகவே ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தாராம். தற்போது மாபெரும் வெற்றி பெற்ற அப்பாவின் படத்தையே ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்துள்ளாராம்

இன்றைய காலத்திற்கும் பொருத்தமான படமாக இருக்கும் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்று அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம். கமல்ஹாசனுக்கு ஒரு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த ’16 வயதினிலே’ படத்தை இயக்கிய பாரதிராஜாவின் மகன் என்பதால் ஸ்ருதிஹாசனும் நடிக்க சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago