நடிகர் பரத்தின் 25 ஆவது படம்!… அஜித் வழியா? விஜய் வழியா?…

சென்னை:-நடிகர் பரத் 2003 ஆம் ஆண்டு ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு விஷால் நடித்த செல்லமே படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்ததன் மூலம் கவனத்தை ஈர்த்தார். அடுத்து வந்த காதல் படத்தில் கலங்க வைத்தார். அப்படம் தந்த வெற்றியால் பரத்தின் கேரியர் கிராஃப் ஜிவ்வென உயர்ந்தது. இப்படியாக பரத்தின் திரையுலகப்பயணம் அமர்க்களமாக அமைந்தாலும், அதன் பின்னர் அவருடைய கேரியரில் அநியாயத்துக்கு தடுமாற்றம்.

இந்நிலையில் எப்படியாவது வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் பரத். அவரது 25வது படமாக நேற்று வெளியாகி உள்ள ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி அவரது கேரியரில் முக்கியமான படமாக இருக்கிறது.கதாநாயக நடிகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு 25 ஆவது படம் முக்கியமான படம். எனவே 25 ஆவது படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்பதில் வெறியோடு இருப்பார்கள்.

அந்த வகையில் அஜித்திற்கு அமர்க்களம், சூர்யாவிற்கு சிங்கம், தனுஷுக்கு வேலையில்லா பட்டதாரி என தங்களின் 25வது படத்தை வெற்றியாக்கி தங்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்கள். விஜய்யின் 25 ஆவது படம் கண்ணுக்குள் நிலவு. பாசில் இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.பரத்தின் 25 ஆவது படமான ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி எந்த பட்டியலில் சேரப்போகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago