இதையெல்லாம் மீறி அந்த நாடு தொடர்ந்து அத்தகைய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்துள்ள அமெரிக்காவும், தென்கொரியாவும் அந்த நாட்டுக்கு எதிராக கரம் கோர்த்து வரிந்து கட்டிக் கொண்டு வருகின்றன. இதற்கிடையே அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆண்டு தோறும் நடத்துகிற கூட்டு ராணுவ பயிற்சி இன்று கொரிய தீபகற்பப் பகுதியில் தொடங்குகிறது. இதில் இரு தரப்பிலும் சேர்த்து சுமார் 5 லட்சம் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டுப்பயிற்சியில் கணினி முக்கிய இடம் வகிக்கிறது. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாகக் கூடி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த கூட்டுப்பயிற்சியை இரு நாடுகளும் கை விட வேண்டும் என்றும் கோரியது. ஆனால் அது நடைபெறவில்லை.இந்நிலையில் திட்டமிட்டபடி அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவப்பயிற்சி இன்று தொடங்குகிறது. இது வடகொரியாவை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகையாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவ்விரு நாடுகளுக்கும் வடகொரியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக வடகொரியா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-அமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவப்பயிற்சி, அணுஆயுதப்போருக்கான ஒத்திகை ஆகும். எங்கள் மதி நுட்பத்தின்படி, எங்களுக்கே உரித்தான பாணியில் எந்த நேரத்திலும் ஈவிரக்கமின்றி கடுமையான தாக்குதல்களை தொடுப்போம் என்பதை நாங்கள் மீண்டும் உறுதிபட தெரிவிக்கிறோம். ஆக்கிரமிப்பாளர்களின் வலிமையை சுட்டுப் பொசுக்கி சாம்பலாக்குவதற்கு வடகொரிய வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே