ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் பிடியில் உள்ள நகரங்களில் வசிக்கும் அனைவரும் இஸ்லாம் மதத்தை தழுவ வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.இவர்களின் ஆவேசத்தை கண்டு அஞ்சி நடுங்கிய குர்திஷ் மற்றும் யாஸிதி இனத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 20 ஆயிரம் மக்கள் ஜிஹாதிகளால் ஊரை விட்டு விரட்டப்பட்டனர். மலை உச்சிகளில் தஞ்சமடைந்து, குடிக்க நீரின்றியும், உண்ண உணவின்றியும் அவர்கள் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பு தெரிவித்த சுமார் 500 பேரை இவர்கள் கொன்றும், சிலரை உயிருடனும் புதைத்துள்ளனர் என ஈராக்கின் மனித உரிமை துறை மந்திரி இன்று அறிவித்துள்ளார்.
சிஞ்சார் பகுதியில் மதம் மாற மறுத்த பெண்கள், குழந்தைகள் ஆகியோரை தலையில் சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள், அவர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று ஆவேசக் கூச்சலிடும் புகைப்படங்கள் அரசுக்கு கிடைத்துள்ளதாகவும், சிலரை அவர்கள் உயிருடன் புதைத்ததாகவும், யாஸிதி இனத்தைச் சேர்ந்த சுமார் 200 இளம்பெண்களை அவர்கள் அடிமைகளாக பிடித்து சென்று விட்டதாகவும் ஈராக்கின் மனித உரிமை துறை மந்திரி முஹம்மது ஷியா அல்-சூடானி தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், சிஞ்ஜார் பகுதியை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே தங்கியுள்ள சுமார் 300 யாஸிதி குடும்பங்கள் மதம் மாற (உள்ளூர் நேரப்படி) நேற்று வரை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் காலக்கெடு விதித்திருந்தனர்.
அந்த கெடு முடிவடைந்து விட்டது. இந்நிலையில், அந்த 300 குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் மக்களின் கதி என்னவாகும். என்ற கவலை மனித உரிமை ஆர்வலர்களிடையே மேலோங்கியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே