முதலில் பெரும்பாலானவர்கள் இந்த அறிகுறிகளை சாதாரண காய்ச்சல் என்று நினைத்து விட்டு விடுவதுண்டு. ரத்தம் அதிகமாக வெளியேறிய பிறகுதான் விபரீதத்தை உணர்வார்கள். இந்த காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் ரத்த அழுத்தம் குறையும். நாடித்துடிப்பு பல மடங்கு உயரும். இது எபோலா வைரஸ்கள் உடல் முழுவதும் பரவி விட்டதை உறுதி செய்யும். அதன்பிறகு எபோலா காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களால் எழுந்து உட்கார கூட முடியாது. படுத்த படுக்கையாகக் கிடந்து போய் சேர வேண்டியதுதான். எனவேதான் எபோலா அரக்கன் நம் நாட்டுக்குள் வந்து விடக் கூடாது என்று அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.எபோலா காய்ச்சலுக்கு இதுவரை உரிய மருந்து, மாத்திரை கண்டுபிடிக்கப்படவில்லை. எபோலா வைரசால் ஏற்படும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றை தடுக்க சிகிச்சை அளிப்பார்கள். அந்த சிகிச்சை வெற்றி பெற்றால் மட்டுமே எபோலா வைரசிடம் இருந்து தப்ப முடியும். எனவே எபோலா விஷயத்தில் மத்திய அரசு உஷாராக உள்ளது.
இந்தியாவில் கடந்த 2010–ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் முதன் முதலாக ஒரு பெண் ஆப்பிரிக்கா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அது பெரிய அளவில் பரவாமல் தடுக்கப்பட்டது. ஆனால் எபோலா வைரஸ் இந்தியாக்குள் வந்து விட்டால், அது நினைத்து பார்க்க முடியாத அழிவை ஏற்படுத்தி விடக்கூடும் என்ற பீதி கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடகா மாநிலம் மட்டுமே எபோலா போன்ற வைரஸ் தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற மாநிலங்கள் எல்லாம் இன்னமும் அது பற்றி வெறுமனே பேசிக் கொண்டும் ஆலோசித்து கொண்டும்தான் இருக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே