இந்த நோய் தாக்கி இதுவரை 887 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 2 அமெரிக்கர்களும் அடங்குவர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தங்கியிருந்த போது இவர்களை ‘இபோலா’ நோய் தாக்கியது.
இது ஒரு உயிர்க்கொல்லி நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே அவற்றை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் தீவிரமாக உள்ளன.அதற்கான நிதி உதவியை உலக வங்கி மூலம் ‘இபோலா’ நோய் தாக்கியுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளன. அதற்கான கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்தது.
அதில் 35 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ‘இபோலா’ நோய் கடுமையாக பரவிவரும் லைபீரியா, சியார்ரா லியோன், கினியா ஆகிய 3 நாடுகளுக்கு ரூ. 1200 கோடி நிதி உதவி ஒதுக்கப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.இந்த தகவலை உலக வங்கி தலைவர் ஜிம் யங் கிம் தெரிவித்தார். ‘இபோலா’ வைரஸ் நோய் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், அதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.நிதி ஒதுக்கீடு ஒப்புதல் உலக வங்கி போர்டுகுழு இயக்குனர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் இந்த வார தொடக்கத்தில் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே