அப்போது அவர் கூறியதாவது:–
நான் இசையமைக்க சென்னைக்கு வரும்போது ஒரு ஆர்மோனிய பெட்டியுடன் வந்தேன். ஆனால் இன்று யாரும் அப்படி வரவேண்டியதில்லை. எல்லாம் கம்ப்யூட்டர் மயமாகிவிட்டது. இதில் இசையை சிந்தித்து டியூன் போட வேண்டியது கிடையாது. கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட சப்தங்களை எடுத்து சேர்த்து போட்டால் நீங்களும் தலை ஆட்டுவீர்கள். தோன்றும்போது புகழோடு தோன்ற வேண்டுமென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது. அறியாமையும் கூட ஒரு வகையில் அறிவு தான்.
சினிமாவுக்கு பாடல் எழுதும் கவிஞர்கள் பாட்டு எழுதி முடிப்பதற்குள் பிரசவ வலியே வந்துவிட்டது போல கூறுகிறார்கள். பிரசவ வலி எப்படி இருக்கும் என்பது தாய்மார்களுக்கு தொயும். பாடல்கள் எழுதுவது மிகவும் எளிதானது. எளிமையான பணியை பிரசவ வலியுடன் ஒப்பிடுவது தவறு.
இன்றைக்கு வரும் சில சினிமா பாடல் ஆசியர்களின் பாடல் வரிகள் என் சொந்த வரிகள். இதனை இந்த புத்தக திருவிழாவில் பகிரங்கரமாக தெரிவித்து கொள்கிறேன். ஆனால் எந்த பாடல் ஆசிரியர்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை. என் இசையை கேட்கும் போது உங்களுக்கு கிடைக்கும் அமைதி, மகிழ்ச்சி புத்தகம் படிக்கும்போதும் கிடைக்கும்.
பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும்போது, இசையையும் தமிழையும் பிரித்து பார்க்க முடியாது. இசையே தமிழ்தான். நான் ஆஸ்கார் விருதுக்கு இதுவரை முயற்சி செய்யவில்லை. எனக்கு பாட குரலை தந்தது இறைவன். என் இசைக்கு ஆசிரியர்கள் மக்கள். எந்த காலத்திலும் 7 சுவரங்களுக்கு மேல் யாரும் இசை அமைக்க முடியாது. வியாபாரம் ஆகிவிடும் என்பதால் நான் இசைப்பள்ளி ஆரம்பிக்கவில்லை. வெற்றி என்று எதையும் எடுத்து கொள்ளாதீர்கள். அவ்வாறு எடுத்து கொண்டால் குறுகிய வட்டத்திற்குள் சென்று விடுவீர்கள்.
இவ்வாறு இளையராஜா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே