தமிழகத்தின் பல பகுதிகளில், இலங்கை அரசுக்கு எதிராக அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதோடு அந்த செய்தியையும் நீக்கியது. இந்நிலையில், இலங்கை அரசின் இந்த செயலை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.இதுதொடர்பாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் அவசர கூட்டம் இன்று(ஆகஸ்ட் 2ம் தேதி) நடந்தது. கூட்டத்திற்கு பிறகு இயக்குநர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மீனவர்களின் வாழ்வாதாரங்களையும், வாழ்வையும் பாதுகாப்பவர் நமது முதல்வர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவரை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் ஆபாசமாக சித்தரித்து அவமானப்படுத்தியுள்ளது. எல்லாவற்றையும் செய்துவிட்டு இப்போது நிபந்தனையற்ற மன்னிப்பு என்ற போர்வைக்குள் மறைந்து கொள்ள முயல்கிறது இலங்கை அரசு.
இப்போது மட்டுமல்ல தமிழர்களின் உரிமை வாழ்க்கை ஆகியவற்றை பாதுகாக்க முதல்வர் தொடர்ந்து போராடும் போதெல்லாம் அதை குற்றம் சாட்டுவதையோ, கேவலப்படுத்துவதையோ அல்லது கொச்சைப்படுத்துவதையோ வழக்கமாக கொண்டுள்ளது இலங்கை அரசு. தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளை புறக்கணிப்பதோடு முதல்வரையும் கொச்சைப்படுத்தி வரும் இலங்கை அரசின் ஒட்டு வாலாக இருக்கும் இலங்கை துணை தூதரகம் தமிழ்நாட்டிற்கு தேவையற்ற ஒன்றாகும். இதை உடனடியாக மூட வலியுறுத்தி, வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி, காலை 10 மணியளவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இலங்கை துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்த அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், தொழிலாளர்கள், தொழில்நுட்பகலைஞர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே