கேங்ஸ்டர் கதை என்பது தமிழுக்குப் புதிதல்ல. ஆனாலும், தன் ஸ்டைலில் வித்தியாசம் கலந்து அதை சொன்ன விதத்தில் தனித்துவம் பெறுகிறார் கார்த்திக் சுப்பராஜ். முதல் பாதியில் ரவுடிகளின் நிஜ முகத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கும் இயக்குனர், இரண்டாம் பாதியில் கதையை வேறொரு பாதைக்கு மாறும்போது, முதல்பாதியில் இருந்த பிடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. ‘தி டர்டி கார்னிவல்’ கொரியன் படத்தின் சாயல் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இரண்டாம்பாதி திரைக்கதையில் செய்த சில மாற்றங்களால் படம் தடுமாறுகிறது. அதிலும் க்ளைமேக்ஸ் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் படத்திலிருந்து தனித்து நிற்கிறது. இரண்டாம்பாதியின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
ஹீரோ சித்தார்த்துக்கு குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த ஸ்கோப்பும் இப்படத்தில் இல்லை. படத்தின் ஹீரோ சித்தார்த்தான் என்றாலும் திரைக்கதையில் ஹீரோவாக மிரட்டுபவர் சிம்ஹாதான். அவரது அதிரடி வில்லத்தனங்களும், காமெடிகளும் மொத்த தியேட்டரையும் மிரளும் வைக்கிறது, சிரிக்கவும் வைக்கிறது. நடிப்பிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார். லட்சுமி மேனன் கேரக்டரிலும் அழுத்தமில்லை! இவரது முந்தைய படங்களை ஒப்பிடும்போது ’ஜிகர்தண்டா’ ஏமாற்றமே தருகிறது. சித்தார்த்துடனான காதல் காட்சிகளிலும் அழுத்தமே இல்லை. இவர்களைத்தவிர பாபி சிம்ஹாவின் அடியாட்களாக வரும் மூன்று பேரின் நடிப்பு ரொம்பவும் யதார்த்தம்.
மொத்தத்தில் ‘ஜிகர்தண்டா’ ஒரு முறை பருகலாம்………..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே