33 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் இதுவரை 4,20,000 டாலர்களை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். ‘3 இடியட்ஸ்’ படத்திற்குப் பிறகு ஜப்பானில் வெளியான ஒரு இந்திப் படம் வசூல் செய்த இரண்டாவது மிகப் பெரிய தொகை இது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தப் படம் ஹாங்காங், தைவான், கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் வெளியானதைத் தொடர்ந்து ஜப்பானிலும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் வெளியீட்டு பிரமோஷனுக்காக ஸ்ரீதேவி ஜப்பானுக்கும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் நடித்த ஹிந்திப் படம் உலக அளவில் வரவேற்பு பெற்று வருவது குறித்து ஸ்ரீதேவி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளாராம். தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக காத்திருக்கும் ஸ்ரீதேவி, விரைவில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தை பிரபல இயக்குனர் பால்கியின் மனைவியான கௌரி ஷிண்டே இயக்கியிருந்தார். அஜித்தும் படத்தில் ஒரு ‘கேமியோ’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் ரசிகர்களிடம் ரஜினிகாந்தை அடுத்து ஸ்ரீதேவியும் பிரபலமாகிவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே