சிங்கம் ரிட்டன்ஸில் அஜய் தேவ்கன், கரீனா செம ஆட்டம்!…

மும்பை:-ஹரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சிங்கம். இதை அப்படியே இந்தியிலும் ரீமேக் செய்தனர். அஜய் தேவ்கன் நடித்தார். ரோகித் ஷெட்டி இயக்கியிருந்தார். அங்கும் இப்படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சிங்கம்-2வும் வெளியாகி வெற்றி பெற்றன. அதேப்போல் இப்போது சிங்கம்-2வை, இந்தியில் சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் ரீ-மேக் செய்து வருகின்றனர்.

ரோகித் ஷெட்டி இயக்கும் இப்படத்தில் அஜெய் தேவ்கனே ஹீரோவாக நடிக்கிறார், கரீனா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். சிங்கம்-2 கதையை அப்படியே எடுக்காமல் சில மாற்றங்கள் செய்து இப்படத்தை இந்தியில் எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் சிங்கம்-2வில் சூர்யா-அனுஷ்கா ஆடிய ‘சிங்கம் டான்ஸ்…’ பாடலை போன்று இந்தியிலும் அதே தொணியில் ‘அடா மஜி சதகளி…’ என்ற ஒரு பாடல் உருவாகியுள்ளது.

இதற்கு அஜெய் தேவ்கன் -கரீனா கபூர் ஆகியோர் நடனம் ஆடியுள்ளனர். இவர்களுடன் பிரபல பாடகர் யோ யோ கனி சிங்கும் ஆடி, பாடியுள்ளார். கணேஷ் ஆச்சர்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளார். சுமார் 100 குழந்தைகளுக்கு போலீஸ் உடை அணிவிக்கப்பட்டு பிரமாண்டமான செட் போட்டு 3 நாட்கள் இந்தப்பாடலை படமாக்கியுள்ளனர். படத்தின் புரமோஷனுக்காக இந்தப்பாடலை தற்போது யூ-டூப்பில் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களிடமும் இந்தப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago