விழாவில் நாகார்ஜூனா பேசியதாவது:–
சூர்யாவுக்கு தமிழகத்தில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். அதைவிட தெலுங்கில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் கஷ்டப்பட்டு நடிக்கிறார். கமலஹாசனுக்கு பிறகு கடினமாக உழைக்கும் நடிகர் சூர்யாதான். மனித நேயம் மிக்கவராகவும் இருக்கிறார்.
‘எய்ட்ஸ்’ விழிப்புணர்வு பிரசாரத்தில் தனக்கு உதவும்படி சூர்யாவை அணுகி கேட்டேன். பலர் இது போன்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட தயங்கிக் கொண்டிருந்த நேரம் அது. நான் கேட்டவுடன் உடனடியாக ஒப்புக் கொண்டு சூர்யாவும், ஜோதிகாவும் உதவினார்கள். அதை என்னால் மறக்க முடியாது.
இவ்வாறு நாகார்ஜூனா பேசினார்.
விழாவில் சூர்யா பேசும் போது, சில காலம் இடைவெளி விட்டு மீண்டும் ‘அஞ்சான்’ படத்தை ‘சிக்கந்தர்’ பெயரில் தெலுங்கில் உருவாக்கி இங்குள்ள ரசிகர்கள் பக்கம் வருகிறேன். ராஜமவுலி ‘பாகுபலி’ என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. எனக்கு சிறு வேடம் கொடுத்தால் கூட அதில் நடிப்பேன் என்றார்.
நடிகை சமந்தா, ‘அஞ்சான்’ பட டைரக்டர் லிங்குசாமி போன்றோரும் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே