ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணா இப்படத்தைத் தயாரிக்கிறார். அத்துடன் லைகா மொபைல் நிறுவன அதிபர் சுபாஷ்கரனும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் என்று செய்தி வந்ததில் இருந்து நிறைய புகைச்சல்கள்.லைகா மொபைல் நிறுவன அதிபர் சுபாஷ்கரன் இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்பட்டதுதான் இந்த சர்ச்சைக்கும், புகைச்சலுக்கும் காரணம். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்தான் சுபாஷ்கரன் என்று ஐங்கரன் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை யாரும் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், கல்லூரி மாணவர்கள் ஒரு குழுவாகத் திரண்டு ‘கத்தி’ படத்தை எதிர்த்துவருகின்றனர். ‘கத்தி’ படம் வெளிவருவதில் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் முருகதாஸ், தயாரிப்பாளர் கருணாவோடு இணைந்து நெடுமாறன், சீமான், திருமாவளவனை சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
” தயாரிப்பாளர் கருணாவோடு நெடுமாறன் ஐயா, திருமா அண்ணா, சீமான் அண்ணா வை சந்தித்தோம், விளக்கம் அளிக்கப்பட்டது , வைகோ ஐயாவை சந்திக்க இருக்கிறோம்! ” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முருகதாஸின் விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படுமா? அடுத்து என்ன நடக்கும்? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே