மீண்டும் கர்ப்பமான ஷாலினி – மகிழ்ச்சியில் தல ‘அஜித்’..!

தமிழில் ‘அமராவதி’ படம் மூலம் அறிமுகமானவர் அஜீத். இப்படத்தை தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் ‘ஆசை’ படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு இவர் நடித்த ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘தீனா’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘வில்லன்’, ‘அட்டகாசம்’, ‘வரலாறு’, ‘கீரிடம்’, ‘பில்லா’, ‘அசல்’, ‘மங்காத்தா’, ‘பில்லா 2’, ‘வீரம்’ போன்ற பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

‘அமர்க்களம்’ படத்தில் நடிக்கும்போது அவருடன் ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கடந்த 2000-ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் அனோஸ்கா என்ற பெண் குழந்தை இருக்கிறாள்.

இந்நிலையில் ஷாலினி மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறாராம். இதனால் அஜீத் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். இரண்டாம் குழந்தையின் வருகையை எதிர்பார்த்து, தனது மனைவி ஷாலினியை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறாராம்.

அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்புகளில் பிசியாக இருந்தாலும் அஜீத் தன் மனைவி ஷாலினி மற்றும் மகளை கவனமாக பார்த்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago