இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. சித்தார்த்தை கண்டித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வாரம் மூன்று, நான்கு திரைப்படங்கள் வெளிவரும்போது, வியாபார ரீதியாக தயாரிப்பாளருக்கு பல பிரச்சினைகள் வரும். சினிமாவுக்குள் இருக்கும் வியாபார பிரச்சினைகள் பொதுவாக நடிகர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. ஒரு படம் வெளியாகும்போது தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் ஆகியோரின் கருத்தை தெரிந்துதான் பட வெளியீட்டு தேதியை அறிவிக்க முடியும்.இது தெரியாமல், படம் தள்ளிப்போனதற்கு நடிகர் சித்தார்த் தயாரிப்பாளரை குற்றம்சாட்டியிருப்பது கண்டனத்துக்குரியதாகும்.
படத்தில் நடித்தற்குரிய சம்பளத்தை வாங்கிய நடிகர் சித்தார்த், தயாரிப்பாளரின் பட வெளியீட்டு தேதியில் தலையிட எந்தவிதமான உரிமையும் இல்லை. சித்தார்த்தின் இந்த செயல்பாட்டுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சத்யஜோதி டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.தாணு, கே.ராஜன், ஜாகுவார் தங்கம், எஸ்.எஸ்.துரைராஜ், சித்ரா லட்சுமணன், எச்.முரளி, சவுந்தரபாண்டியன் உள்பட அனைத்து தயாரிப்பாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘ஜிகிர்தண்டா’ பட அதிபர் கதிரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களின் வேண்டுகோளுக்கிணங்க படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தேன். ஜிகிர்தண்டா திரைப்படம், என் முதலீடு. அது, என் குழந்தை. என் குழந்தையை நானே கொல்ல விரும்புவேனா? இது எப்படி சித்தார்த்துக்கு புரியாமல் போனது? என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே