இந்த படம் ஆந்திராவில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டது. விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் கணிசமான லாபம் பார்த்துள்ளனர்.
இதையடுத்து தெலுங்கு திரிஷ்யம் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் படத்தில் நடித்த வெங்கடேஷ், மீனா, நதியா மற்றும் இயக்குனர் ஸ்ரீப்ரியா பங்கேற்றனர். தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்.
விழாவில் பேசிய பலரும் நடிகைகள் மீனா, ஸ்ரீப்ரியா, நதியாவை பாராட்டினார்கள். மூன்று பெண்களும் இணைந்து இப்படத்தில் சாதித்து விட்டதாக புகழ்ந்தனர்.
தெலுங்கில், ஸ்ரீப்ரியா இப்படத்தை இயக்க முடிவு செய்ததும் மோகன்லால் கேரக்டருக்கு வெங்கடேஷை தேர்வு செய்தார். மலையாளத்தில் நடித்த மீனாவையே தெலுங்கிலும் நடிக்க பேசி முடித்தார். பெண் போலீஸ் அதிகாரி வேடத்துக்கு நதியாவை ஒப்பந்தம் செய்தார்.
நதியா இதில் நடிக்க ஆரம்பத்த புதிதில் ஸ்ரீப்ரியாவுக்கு டைரக்ஷன் எப்படி தெரியும் சிறப்பாக படத்தை எடுப்பாரா என்ற சந்தேகம் இருந்தது பிறகு படத்தை அவர் இயக்கிய திறமையை பார்த்து வியந்தார். இதனை நதியாவே பேட்டியொன்றில் தெரிவித்தார்.
அடுத்து தமிழிலும், திரிஷ்யம், ரீமேக் ஆகிறது. கமல் நடிக்கிறார். மீனா வேடத்தில் நடிக்க சிம்ரன், கவுதமி பெயர்கள் அடிபட்டன. தற்போது அபிராமி நடிக்கப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே