அவர் ஒருநாள் என்னை கூப்பிட்டு கதாநாயகனாக நடிய்யா என்றார். மூன்று படத்தில் சம்பாதித்ததை நான்காவது படத்தில் விடப் போகிறீர்களா யோசியுங்கள் என்றேன். எனக்கு நம்பிக்கை இருக்கு நீ நடி என்றார். அப்படித்தான் புதிய வார்ப்புகள் படத்தில் நடித்தேன். சுவர் இல்லாத சித்திரங்கள் படத்துக்கு தேர்வு செய்து வைத்திருந்த பையன் ஓடி விட்டதால் அதிலும் நடிக்க வேண்டி வந்தது.
கதாநாயகனாக அறிமுகமாவது சிரமம். நுழைந்து விட்டால் நின்று விடலாம்.
கிழக்கே போகும் ரெயில் படத்தில் பணியாற்றியபோது விஜயன் ஏதாவது வேடம் தரச்சொல்லி நச்சரிப்பார். நான் டைரக்டரிடம் சொல்லி சிறிய வேடம் வாங்கி கொடுத்தேன். அவர் நடித்த காட்சிக்கு தியேட்டர்களில் கைதட்டல்.
நிறம் மாறாத பூக்கள் கதையை பாரதிராஜாவிடம் சொல்லி ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். அவரோ விஜயன் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். அப்படித்தான் விஜயன் பெரிய ஆள் ஆனார்.
அதே விஜயன் என்னுடன் நடிக்க சந்தர்ப்பம் வந்தது. அப்போது மூன்று மணி நேரம் என்னை காக்க வைத்தார். சிறு வேடம் கேட்டு கெஞ்சியது நினைவில் கொள் என்றேன். நெளிந்தார். இப்படிப்பட்ட வசதி வாய்ப்பு கதாநாயகர்களுக்கு மட்டுமே உண்டு.
பரோட்டா சூரி, பரோட்டா சாப்பிடும் போட்டியில் திரும்பவும் முதல்ல இருந்து எண்ணு என்ற ஒரு வசனம் பேசி இப்போது வளர்ந்து விட்டார். துருவாவும் இப்படத்தில் உழைத்துள்ளார். நன்றாக வருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
டைரக்டர்கள் விக்ரமன், வெற்றிமாறன், விஜய்சங்கர், தயாரிப்பாளர்கள் மதியழகன், சுரேஷ் காமாட்சி, ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் உள்ளிட்டோர் பேசினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே