கடந்த வாரம் வெளியான தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜிகர்தண்டா படம் இந்த வாரம் வெளியானால் விஐபியின் வசூல் குறையும் என்பதால் ஜிகர்தண்டா படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க சொன்னாராம் தனுஷ். அவர் கேட்டுக்கொண்டபடி ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார் கதிரேசன். இது தெரிய வந்ததும் ஜிகர்தண்டா படத்தின் கதாநாயகனான சித்தார்த், ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பற்றி தன்னுடைய ட்விட்டரில் தன் கோபமாக சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த விஷயம் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
பல கோடி செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்தான் தன் படத்தின் ரிலீஸ் தேதியை தீர்மானிக்க வேண்டியவர். அதன்படி ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ஜிகர்தண்டா படத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார். இதில் தலையிட சித்தார்த்துக்கு உரிமை இல்லை. அப்படி இருக்க தனக்கு சம்பளம் கொடுத்த முதலாளி கதிரேசன் பற்றி இவர் எப்படி கருத்து தெரிவிக்கலாம்? என்று சில தயாரிப்பாளர்கள் கோபக்குரல் எழுப்பி உள்ளனர். அது மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இது பற்றி புகார் கொடுத்து சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கவும் வற்புறுத்த திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே