இசையமைப்பாளர் ஜிப்ரானை திரும்பிப் பார்க்க வைத்த கமல்!…

சென்னை:-களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அதன்பிறகு இயக்கிய படம் வாகை சூடவா. இந்தபடத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அப்படத்தில் அவரது பாடல்கள் வித்தியாசமாக இருந்ததால் ஹிட்டானது. ஆனால் அதன்பிறகு அவர், வத்திக்குச்சி, நய்யாண்டி, குட்டிப்புலி என சில படங்களுக்கு இசையமைத்தார். அந்த பாடல்கள் ஹிட்டாகவில்லை.

இருப்பினும், வாகை சூடவா பாடலை அந்த படம் வெளியான நேரத்திலேயே கேட்டிருந்த கமல், தனது விஸ்வரூபம் 2 படத்திற்கு ஜிப்ரானை இசையமைப்பாளராக புக் பண்ணினார். அது மட்டுமின்றி, உத்தமவில்லன், த்ரிஷ்யம் தமிழ் ரீமேக் ஆகிய படங்களுக்கும் தொடர்ச்சியாக புக் பண்ணி மற்ற இயக்குனர்களை எல்லாம் ஜிப்ரானை திரும்பிப்பார்க்கும்படி செய்து விட்டார் கமல்.

விளைவு, ஒரே இசையமைப்பாளரை தொடர்நது 3 படங்களுக்கு கமல் புக் பண்ணியிருக்கிறார் என்றால் அவரிடம் ஏதோ விசேஷ திறமை உள்ளது என்று இப்போது மற்ற இயக்குனர்களும் அவரை நாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், புத்தகம் படத்தையடுத்து அமரகாவியம் படத்தில் நடித்துள்ள ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கவிருக்கும் சென்னை சிங்கப்பூர் என்ற படத்திற்கும் தற்போது ஜிப்ரான்தான் ஒப்பந்தமாகியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago