கொட்டை இல்லாத மாம்பழம் கண்டுபிடிப்பு!…

பாட்னா:-நமது நாட்டில் முதலில் கொட்டையில்லாத திராட்சைப் பழம் விளைவிக்கப்பட்டது. தற்போது நமது விஞ்ஞானிகள் கொட்டையில்லா மாம்பழத்தை விளைவித்து சாதனை படைத்துள்ளனர்.பீகாரில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத் துறையின் தலைவராக பணியாற்றும் வி.பி.படேல் இது குறித்து கூறுகையில், மாம்பழ வகைகளான ரத்னா மற்றும் அல்போன்சா ஆகியவற்றை கலப்பினம் செய்து கொட்டையில்லா மாம்பழத்தை தாங்கள் விளைவித்துள்ளதாக கூறினார்.

இதற்கு சிந்து என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தற்போது நாட்டின் பல பகுதிகளில் இதனை விளைவிக்கும் சோதனை முயற்சி நடப்பதாகவும் தெரிவித்தார். தங்களது முயற்சி வெற்றி பெறுவதுடன், கொட்டையில்லா மாம்பழங்களின் தரத்தையும் உயர்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் படேல் மேலும் கூறினார்.

இதனை பண்ணைகளிலும், நமது வீட்டிலும் கூட பயிரிட முடியும். தங்களது முதல் சோதனை முயற்சி மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள மண்டல பழ ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றதாக கூறிய படேல், மூன்று ஆண்டுகளில் நல்ல பழங்கள் காய்த்ததாக தெரிவித்தார். 200 கிராம் எடையுள்ள இந்த மாம்பழம் ஒவ்வொன்றிலும் நார்கள் மிக குறைவாக காணப்படுகிறது. ஆக கொட்டையில்லா மாம்பழங்களை இனி மக்கள் மகிழ்ச்சியுடன் உண்டு மகிழலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago