இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி வகுத்த 17 அம்ச திட்டம்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக கடலோர விரைவு போக்குவரத்து, துரித ரெயில், பஸ் பயணம், தொழிலாளர் பணிகளில் சீர்திருத்தம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக 17 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றை வகுத்தார்.

இந்த திட்டம் கடந்த 10ம் தேதி இறுதி செய்யப்பட்டு மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதன் மீதான விரிவான செயல்திட்டத்தையும், அவற்றை அமல்படுத்துவது தொடர்பான கருத்துகளையும் ஜூலை 20ம் தேதிக்குள் உருவாக்கித் தருமாறும் அந்த அமைச்சகங்கள் கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டன.மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற 100-வது நாள் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வருகிறது. அப்போது இந்த 17 அம்ச திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை மோடி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள முக்கிய திட்டங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

1. பயணிகள் தங்களது முனையில் இருந்து நாட்டில் தாங்கள் செல்ல விரும்பும் எந்த பகுதியையும் 24 மணி நேரத்திற்குள் சென்றடையும் விதமாக சாலை மற்றும் ரெயில்வழி போக்குவரத்தை மேம்படுத்துவது. இதற்காக கிழக்கு மற்றும் மேற்கு கடலோர விரைவு வழிகளை அமைப்பது. மேலும் இந்த விரைவு வழிகளை ஒருங்கிணைப்பது.

2. மத்திய பிரதேச மாநிலம் கான்ஹாவில் இருந்து ஆந்திர மாநிலம் கிருஷ்ணா வரையிலான இடைவழி பாதையை உருவாக்குவது. இந்த பாதையில் சாலை போக்குவரத்து, ரெயில்கள் ஒருங்கிணைப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை அமைப்பது போன்றவை நிறைவேற்றப்படும்.

3. நகரங்களில் பயணிகள் விரைவான மற்றும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வதற்கு ஏற்ப மெட்ரோ ரெயில் மற்றும் துரித பஸ் போக்குவரத்துகளை ஏற்படுத்துவது.

4. உலகத் தரம் வாய்ந்த துறைமுகங்களை மேற்கு மற்றும் கிழக்கு கடலோர பகுதிகளில் அமைப்பது. இதன் மூலம் அதிக எடை கொண்ட சரக்கு கப்பல்களை உலக நாடுகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய கடல் வழித்தடமாக இந்தியாவை உருவாக்குவது.

5. நாட்டின் அனைத்து குடிமக்களும் பயன்பெறும் வகையில் நீண்டதூர தொலைபேசி கட்டணங்களை உள்ளூர் கட்டண அளவிற்கு குறைப்பது.

6. ஊரகப் பகுதிகளில் சிறிய மின்பாதைகளை(கிரிட்) தனியாரும், கூட்டுறவு திட்டத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள அதிகாரம் அளிப்பது. கிராமப்புறங்களிலும் இதுபோன்ற சிறிய மின்பாதைகளை அமைப்பதற்கு திட்டமிடுதல்.

7. தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிகளுக்கு அமர்த்துவதை தவிர்த்து, அவர்கள் நிரந்தரமாக பணியாற்றும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது. தொழிற்சாலைகளுக்கான சட்ட விதிகளை சிறுதொழில் நிறுவனங்களிலும் செயல்படுத்துவது.

8. கறுப்பு பணத்தை தடுக்க, பான்கார்டு மற்றும் ஒரே மாதிரியான அடையாள எண்களை அனைத்து வங்கிகளும், நிதிநிறுவனங்களும் பயன்படுத்துவதை கட்டாயமாக்கல். இ-டெண்டர் முறையை பயன்படுத்த அனைத்து அரசுகளையும் கட்டாயப்படுத்துவது.

9. பொதுமக்கள் நலன் கருதி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு பணியாளர்களின் சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருதல்.

10. மருத்துவதுறையில் ஆண் பணியாளர்களை கூடுதலாக அனுமதிக்க சீர்திருத்தங்களை கொண்டு வருவது. மாவட்டங்களில் சுகாதார கல்வி நிறுவனங்களை ஏற்படுத்துவது, இவை மாவட்ட மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வகை செய்தல். சமூக சுகாதாரத்தில் 3 ஆண்டு பி.எஸ்சி. படிப்பை ஏற்படுத்துவது.

11. மேற்கண்டவை உள்பட 17 அம்ச திட்டத்தின் லட்சியங்களை நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில், பொதுச்சேவை வினியோக உத்தரவாத அமைப்பு ஒன்றை நிறுவுதல்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago