மும்பையை கலக்கும் ‘பீட்சா’ பட ரீமேக்!…

மும்பை:-கடந்த 2012ல் தமிழ் சினிமாவில் வெளியான மிகப்பெரிய ஹிட் படம் பீட்சா. அதுவரை எத்தனையோ விதமான ஹாரர் படங்கள் வந்திருந்தாலும், அப்படம் அத்தனை படங்களையும் முறியடித்து நம்பர்-ஒன்னாக இடம்பிடித்தது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய அப்படத்தை பின்னர் கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றது.

அதையடுத்து, இந்தியில் அக்ஷய் அக்கினேனி என்பவர் பீட்சாவை ரீமேக் செய்தார். அக்ஷய் ஒபேராய் நாயகனாக நடித்த அப்படத்தில் தமிழில் ரம்யா நம்பீசன் நடித்த வேடத்தில் பில்லா-2வில் நடித்த பார்வதி ஓமனக்குட்டன் நடித்தார்.மேலும். சித்தார்த் ராய் கபூர், டேவிட் பட இயக்குனர் பிஜாய் நம்பியார் ஆகியோர் தயாரித்த அப்படம் கடந்த 18ம் தேதி திரைக்கு வந்தது. பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் வெளியான அப்படம் மும்பை சினிமா வட்டாரங்களையே மிரட்டும் வகையில் வசூலை குவித்துக்கொண்டிருக்கிறதாம்.

கூடவே இந்தியில் 3டி படமாக வெளியிடப்பட்டதால் ஏற்கனவே அச்சுறுத்தல் நிறைந்த அப்படத்தைப்பார்த்து இந்தி சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.அதோடு, அப்படத்தைப்பார்த்த மீடியாக்கள் இதுவரை இந்தியில் வெளியான ஹாரர் படங்களில் இந்த பீட்சா புதுமாதிரியாக உள்ளது என்று விமர்சித்து பாராட்டி வருகிறார்களாம். இதுவரை வெளியான தமிழ், கன்னடம், பெங்காலி மொழிகளைவிட இந்தியில் அதிக வசூலை ஈட்டும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago