சென்னை:-2004ம் ஆண்டு வெளியாகி பரபரப்பாக ஓடிய ‘காதல்’ படத்தில் வில்லனாக நடித்தவர் தண்டபாணி. அந்தப்படத்தில் கதாநாயகி நடிகை சந்தியாவுக்கு தந்தையாக நடித்து இருந்தார். கொடூர முகத்துடன் செயற்கைத்தனம் இல்லாத அவரது வில்லன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.சித்திரம் பேசுதடி படத்திலும் வில்லன் கேரக்டரில் சிறப்பாக நடித்து இருந்தார். அதில் வரும் ‘‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’’ பாடலில் கானா உலகநாதனுடன் இயல்பாக நடித்து இருந்தார்.

தொடர்ந்து இங்கிலீஷ்காரன், உனக்கும் எனக்கும், வட்டாரம், முனி, மருதமலை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது, நடிகர் சரத்குமார் நடிக்கும் ‘சண்டமாருதம்’ படத்தில் நடித்து வந்தார். நேற்று சென்னையில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு இரவு வடபழனி மன்னார் தெருவில் உள்ள வீட்டுக்கு திரும்பினார். காலை 6 மணிக்கு திடீர் என்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நடிகர் தண்டபாணி மாரடைப்பு காரணமாக இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் – நடிகைகள் விரைந்து சென்று தண்டபாணி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் தண்டபாணியின் சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். அங்கு இறுதிச் சடங்கு நடக்கிறது. இதற்காக அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் கொண்டு செல்லப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் உடன் செல்கிறார்கள்.மரணம் அடைந்த நடிகர் தண்டபாணிக்கு வயது 71. மனைவி இல்லை. லெனின், விமலாகித்தன், பழனிகுமார் என்ற மகன்களும், ராஜேஷ்வரி என்ற மகளும் உள்ளனர். சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக முன்னேறி குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு உள்பட 50 படங்களில் நடித்தார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு திண்டுக்கல்லில் கடை வைத்து பொறி வியாபாரம் செய்து வந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago