சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிரஞ்சீவி திடீர் சந்திப்பு!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் லிங்கா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் அங்குள்ள ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்டுடியோவில் பிசியாக ரஜினி நடித்துக்கொண்டிருந்தார். அப்போது ரஜினியிடம், சிரஞ்சீவி உங்களை பார்க்க விரும்புகிறார் என தெரிவிக்கப்பட்டது. உடனே வருமாறு ரஜினி சொல்லிவிட்டார். இதையடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த சிரஞ்சீவி, ரஜினியை பார்த்ததும் நெகிழ்ந்தார்.

அவரை கட்டியணைத்து வரவேற்ற ரஜினி, அங்குள்ள தனி அறைக்கு அழைத்து சென்றார். இருவரும் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அறைக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து பட யூனிட்டை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஸ்டுடியோவில் ரஜினி ஷூட்டிங் நடந்தபோது, பக்கத்திலேயே சிரஞ்சீவி நடிக்கும் 150வது படத்துக்கான போட்டோ செஷன் நடந்தது. ரஜினியும் இதே ஸ்டுடியோவில் இருப்பதை அறிந்து கொண்டு சிரஞ்சீவி ஓடோடி வந்தார். இருவரும் அரைமணி நேரமாக என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. சந்திப்புக்கு பிறகு வெளியே வந்தவர்கள், உற்சாகத்துடன் காணப்பட்டனர் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago