நடிகை லட்சுமி மேனன் பாட்டுக்கு குத்தாட்டம் ஆடும் இனியா!…

சென்னை:-விமல்பிரியா ஆனந்த் நடித்து வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்த படத்தில் சூரியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் முதன்முறையாக நடிகை லட்சுமிமேனன் ஒரு பாடல் பின்னணி பாடியுள்ளார். அவர் பாடிய பாடலுக்கு பாலிவுட் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன் நடனமாடுவதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால், இப்போது அவர் ஆடுவதாக கூறப்பட்ட அந்த பாடலில் வாகை சூடவா நாயகி இனியா குத்தாட்டமாடுவதாக அப்பட டைரக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, கேரளாவில் தனது சகோதரியுடன் இணைந்து நடன நிகழ்ச்சிகள் நடத்தி வந்தவர்தான் இனியா. அதனால் அவருக்கு இந்த பாடலில் நடனமாடுவது ஒன்றும் இமேஜை பாதிக்கக்கூடிய விசயமாக தெரியவில்லையாம். அதனால் தொடர்ந்து கதாநாயகி அல்லாத வேடங்கள், அயிட்டம் பாடலுக்கு ஆடுவது என்றாலும் நான் ஓகே என்று தொடை தட்டுகிறார் இனியா.அவரிடத்தில் நீங்கள் ஜோடி சேர்ந்த விமல் நடிக்கும் படத்திலேயே குத்தாட்டமாடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டால், விமலுடன் வாகை சூடவா படத்தில் நடித்தபோது எங்களுக்கிடையே நல்லதொரு புரிதல் இருந்தது.

அவர் என்னை விட சீனியர் நடிகர் என்பதால் சில டிப்ஸ்களை பெற்றும் நடித்தேன். தொடர்ந்து அவருடன் நடிக்க வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், சில படங்களின் தோல்வி எனது மார்க்கெட்டை சரித்து விட்டது. இருப்பினும், சினிமாவில் இதுபோன்ற மேடு பள்ளங்கள் வருவது இயல்பு. அதனால் இந்த படத்தில் விமலுடன் குத்தாட்டமாடினாலும், எதிர்காலத்தில் மீண்டும் அவருடன் டூயட் பாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்கிறார் இனியா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago