நான் நடித்த ‘தாம் தூம்’ , ‘மங்காத்தா’, ‘காஞ்சனா’ ஆகியவை ஹிட் படங்கள். இருந்தாலும் அதிகமாக படம் பண்ண வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. வித்தியாசமான முயற்சியாக ‘ஒன்பதுல குரு’ படத்தில் நடித்தேன். ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
சிறந்த படம், ரசிகர்களுக்கு பிடித்த படம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவே இடைவெளியாக மாறிவிட்டது. இந்த வருடம் அது மாறும். ரசிகர்கள் ஆதரவு இல்லாவிடில் இந்த இடத்தில் நான் நிற்க முடியாது. ஆரம்பத்தில் இருந்த நடிகைகள் இப்போது இல்லை. நான் இருக்கிறேன் என்றால் அது ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவுதான்.
அவர்களுக்கு ஏதாவது செய்யாவிட்டால் நான் சுயநலவாதி ஆகி விடுவேன். எனவே நற்பணி செய்கிறேன். சிறு வயது முதலே நற்பணி காரியங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அஜித் சார் படத்தில் நடித்து உள்ளேன். விஜய் சார் எனக்கு நல்ல நண்பர். சில வாய்ப்புகள் அவர் கூட நடிக்க வந்த போதும் சரியான நேரம் அமையவில்லை. அந்த நேரம் வரும் போது அது நிறைவேறும். அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் அனைத்து ஹீரோக்களுடனும் நடிக்க ஆசை உண்டு. நல்ல கதை அமைந்தால் எல்லா புது இயக்குனர்கள், புது நடிகர்கள், இளம் நடிகர்களுடன் நடிக்க காத்திருக்கிறேன்.
மாதம் ஒரு முறை அல்லது வாய்ப்பு கிடைக்கும் போது என் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திக்கிறேன். அவர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. தமிழில் ‘இரும்புக்குதிரை’, ‘அரண்மனை’, மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘ராஜாதி ராஜா’ கன்னடத்தில் ஒரு படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே