மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை தமன்னா!…

சென்னை:-தமன்னா தனது படத்தில் நாயகியாக நடித்தால் அந்த படம் ஹிட் என்று உறுதியாக நம்பக்கூடியவர் டைரக்டர் சிவா. அந்த வகையில், தமிழில் அவர் இயக்கிய சிறுத்தை, வீரம் என்ற இரண்டு படங்களிலுமே தமன்னாதான் நாயகி. அந்த இரண்டு படங்களுமே கமர்சியல் ரீதியாக ஹிட்டாகின. அதேப்போல் தெலுங்கில் சிவா இயக்கத்தில் தமன்னா நடித்த படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன.

அதனால் தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலுமே தமன்னா இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சிவா. அதன்காணமாக, வீரம் இந்தி ரீமேக்கில் சல்மான்கானுக்கு ஜோடியாக தமன்னாவை இறக்கி விட திட்டம் போட்டார். அதற்கான சூழ்நிலைகள் சாதகமாகி வந்தன. அந்த நேரத்தில், கெளதம்மேனன் படத்தையடுத்து தான் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க மீண்டும் சிவாவுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம் அஜீத்.

தலயின் தரிசனம் அத்தனை எளிதில் தனக்கு கிடைக்காது எனறு நினைத்திருந்த சிவாவுக்கு இது பெரிய இன்ப அதிர்ச்சியாகி விட்டதாம். அதனால் தலயை இயக்கும் அடுத்த பட வேலைகளில் இறங்கியிருக்கிறார் சிறுத்தை சிவா. இந்த சேதி, தமன்னாவின் காதுகளை எட்டியதைத் தொடர்ந்து மீண்டும் தன்னை தலயுடன் ஜோடி சேர்க்குமாறு சிவாவை சுற்றி சுற்றி வருகிறாராம். அதனால், தலயின் ரூட்டில் வேறு எந்த நடிகைகளும் க்ராஸ் ஆவதற்கு முன்பு தமன்னாவின் பெயரை அவர் முன்வைத்து ஓ.கே வாங்குவதற்காக அலைந்து கொண்டிருக்கிறார் சிவா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago