பாலிவுட்டில் நுழையும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்…!

இயக்குனர் லிங்குசாமியும், அவரது அண்ணன் சந்திரபோஸும் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் பல படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர். இதுவரை தமிழ் சினிமாவில் ‘பையா’, ‘வேட்டை’, ‘வழக்கு எண் 18/9’, ‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’, ‘மஞ்சப்பை’ ஆகிய படங்களை தயாரித்து உள்ளனர்.

‘கோலி சோடா’ படத்தை வாங்கி வெளியிட்டுள்ளனர். இவர்கள் தயாரித்த, வெளியிட்ட அனைத்து படங்களும் சூப்பர், டூப்பர் ஹிட்டாகியுள்ளன. தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘அஞ்சான்’, கமல் நடிப்பில் உருவாகும் ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகின்றனர். இயக்குனரும், நடிகருமான மனோபாலா தயாரிப்பில் உருவாகும் ‘சதுரங்க வேட்டை’ படத்தை வாங்கி வெளியிடவும் உள்ளனர்.

தமிழில் ‘சதுரங்க வேட்டை’ ரிலீஸ் ஆகும் முன்பே, தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் ரீமேக் மூலமாக பாலிவுட்டில் முதல்முறையாக கால்பதிக்க உள்ளது. இந்தியில் அக்ஷய் குமார் அல்லது அஜய் தேவ்கான் இருவரில் ஒருவர் ஹீரோவாக நடிப்பார் என தெரிகிறது. தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சதுரங்க வேட்டை படத்தில் நட்டு நட்ராஜ், இஷாரா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். எச்.வினோத் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்துக்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வருகிற ஜூலை 25-ந் தேதி தமிழகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago