அர்ஜென்டினா அணி 3–வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. 1978, 1986–ல் அந்த அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது. ஜெர்மனி அணி 4–வது தடவையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி 1954, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்று இருந்தது.இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவது 3–வது முறையாகும். இதில் 1986–ல் மோதிய போட்டியில் அர்ஜென்டினாவும், 1990–ல் ஜெர்மனியும் வெற்றி பெற்றன.இதனால் இந்த முறை உலக கோப்பையை வெல்வது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. உலக கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் இரு அணிகளும் இருப்பதால் இறுதிப்போட்டி பரபரப்பாக இருக்கும்.
உலகின் முன்னணி கால்பந்து வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான லியோனல் மெஸ்சி இந்த போட்டித் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். 4 கோல்கள் அடித்துள்ள அவர் சக வீரர்கள் கோல் அடிக்க மிகவும் உதவியாக இருந்து வருகிறார். எதிர் அணி வீரர்களை திணறடித்து அவர் பந்தை கடத்தி செல்லும் விதம் அருமையாக உள்ளது.டிகோ மரடோனா போல் இந்த உலக கோப்பையை மெஸ்சி அர்ஜென்டினா அணிக்கு பெற்று தந்து சாதனை படைப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனி அணிக்கு அவர் மிகப்பெரிய சவாலாக விளங்குவார்.மற்றொரு முன்னணி டி மரியா காயம் காரணமாக நெதர்லாந்து அணிக்கு எதிரான அரை இறுதியில் விளையாடவில்லை. இறுதிப் போட்டியில் அவர் ஆடுவாரா என்பது உறுதியில்லை. அவர் இல்லாமல் போனால் பாதிப்பாக இருக்கும். கோன்சாலோ ஹிகுயின், லவாசி, அகிரோ மாசினரோ போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
அர்ஜென்டினா அணியின் பின்களம் சற்று பலவீனமாக இருக்கிறது. இதை சரி செய்வது அவசியமான ஒன்றாகும். ஜெர்மனியுடன் ஒப்பீடுகையில் அர்ஜென்டினா வீரர்களின் ஆட்டத்தில் வேகம் குறைவாக இருக்கிறது. இறுதிப்போட்டியில் இதையும் மாற்றிக்கொள்வது முக்கியமானதாகும். மேலும் வீரர்களின் காயமும் அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.தோல்வி எதையும் சந்திக்காமல் அர்ஜென்டினா இறுதிப்போட்டியில் ஆடுகிறது. மேலும் நாக்அவுட் டில் ஒரு கோல் கூட வாங்கவில்லை.
இந்த போட்டி தொடரில் மிகவும் நேர்த்தியுடனும், வேகத்துடனும் விளையாடும் அணிகளில் முதன்மையானதாக ஜெர்மனி அணி திகழ்கிறது. பிரேசிலை அதன் சொந்த மண்ணில் அரை இறுதியில் 7–1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி இருந்தது.பிரேசிலை மண்ணை கவ்வ செய்த ஜெர்மனி அதே மாதிரியான ஆட்டத்தை இறுதி போட்டியிலும் வெளிப்படுத்தினால் அந்த அணிக்குதான் கோப்பை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. பின்களம், நடுகளம், முன்களம் ஆகிய அனைத்து வகையிலும் அந்த அணி சிறந்து விளங்குகிறது.ஜெர்மனி அணி வீரர்களின் வேகத்தை கட்டுப்படுத்துவது அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.முன்கள வீரரான தாமஸ் முல்லர் அந்த அணியின் துருப்பு சீட்டாக உள்ளார். அவர் 5 கோல்கள் அடித்துள்ளார். அர்ஜென்டினா பின்கள வீரர்களுக்கு கடும் தலைவலியாக இருப்பார். இது தவிர குரூஸ், உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த குளூஸ், ஆந்த்ரே, ஒசில், கேதிரியா, ஸ்வாடிக்கர் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
இது தவிர கேப்டன் பிலிப் லாம், ஹம்மல்ஸ், போட்டங் போன்ற வீரர்கள் அர்ஜென்டினா முன்கள வீரர்களுக்கு சவாலாக இருப்பார்கள்.ஜெர்மனி அணியின் மிகப்பெரிய தடுப்பு சுவராக கோல் கீப்பர் மேனுவேல் நெயூர் உள்ளார். அவரை தாண்டி பந்து கோல் வலைக்குள் செல்வது கடினமே. இவர் அர்ஜென்டினாவுக்கு சவாலாக விளங்க கூடியவர்.ஜெர்மனி ஒவ்வொரு ஆட்டத்திலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. அந்த அணி கானாவுடன் மட்டுமே ‘டிரா’ செய்தது. மற்ற அனைத்து ஆட்டங்களிலும் வென்றது.
துடிப்பான ஆட்டம் மற்றும் புத்திசாலித்தனமான ஆட்டத்தால் அர்ஜென்டினாவை விட அந்த அணி சற்று முன்னிலையில் இருக்கிறது. இதை ஜெர்மனி பயன்படுத்திக் கொள்ளும் என்று கருதப்படுகிறது. அர்ஜென்டினாவின் ஒரே பலம் முன்களம். இதனால் அந்த அணி முன்னிலைப்படுத்தி விளையாட போராடும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே