நம்பியார் படத்தில் குத்துப்பாட்டு பாடிய நடிகர் சந்தானம்!…

சென்னை:-விஜய்யுடன் நடித்த தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலில் டயலாக் பேசுவதுபோல் சின்னச்சின்ன பிட்டாக பாடியிருந்தார் சந்தானம். அதையடுத்து, இப்போது ஸ்ரீகாந்த் தயாரித்து நடித்துள்ள நம்பியார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதோடு சரக்கு அடித்து விட்டு ஸ்ரீகாந்த் பாடும் ஒரு பாடலை பின்னணி பாடியிருக்கிறார்.

கணேஷா என்ற புதியவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கெட்டவன் இருப்பான். அப்படிப்பட்ட அவன் வெளியே வரும்போது என்னென்ன நிகழ்கிறது என்பதை மையமாகக் கொண்டு கதை பண்ணியுள்ளனர். அப்படி ஸ்ரீகாந்துக்குள் இருக்கும் கெட்டவனாக சந்தானம் வெளியே வருகிறாராம். அவர் என்னென்ன ரகளை செய்கிறார் என்பதுதான் படமாம்.

அதனால்தால் எம்ஜிஆர் படங்களில் வில்லனாக வரும் நம்பியாரின் பெயரை அந்த கெட்டவனுக்கு வைத்திருக்கிறார்களாம். அந்த வகையில், சந்தானம் இதுவரை நடித்த படங்களில் இது புதுமாதிரியான வேடமாம் அவருக்கு. அதனால் அந்த கெட்டவனாக ஸ்ரீகாந்த் நடிக்கும்போது சந்தானம்தான் அவருக்கு டப்பிங் கொடுத்துள்ளாராம்.
அந்த வகையில், நம்பியார் படத்தில் சந்தானத்தின் ஆளுமை அதிகமாக இருக்குமாம். அதிலும் பாரில் சரக்கு அடித்து விட்டு ஸ்ரீகாந்த் ஆடிப்பாடும், ஆற அமர உட்கார்ந்து ஆட்டம் போடு என்று தொடங்கும் அந்த பாடலை சந்தானம் பாடியிருப்பதால் படத்துக்கு பெரிய ப்ளசாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார் ஸ்ரீகாந்த்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago