பொதுவாக தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளில் ஒரு வருடத்திற்குள்ளாகவே ஒரு படத்தைத் தயாரித்து வெளியிட்டு விடுவார்கள். ஒரு சில படங்கள்தான் பணப்பிரச்சனை காரணமாகவும் வேறு சில பிரச்சனை காரணமாகவும் தாமதமாக தயாராகி வெளிவருவதுண்டு. ஆனால், இந்தப் படம் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா உட்பல பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கத் தயாராகி வருகிறது.
இப்படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே படத்திற்கான வியாபாரமும் நடைபெற்று வருகிறது. இது வரை மூன்று ஏரியாக்களை விற்று சுமார் 47 கோடிக்கு இப்போதே வியாபாரம் செய்துவிட்டார்கள். அது மட்டுமல்ல மற்ற ஏரியாக்களுக்கும் இப்போதே பலரும் போட்டி போடுகிறார்களாம். இன்னும் ஆறு மாதத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.
படப்பிடிப்பு முடிவடையும் போதே உடனுக்குடன் படத்தின் எடிட்டிங், கிராபிக்ஸ் ஆகிய வேலைகளையும் செய்து வருகிறார்கள். இரண்டு பாகமாக வெளிவர உள்ள இந்தப் படத்தின் செலவு 175 கோடி வரை இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கிய மீடியா பெரும் புள்ளி ஒருவர் இந்தப் படத்திற்காக 60 கோடி ரூபாய் வரை பைனான்ஸ் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு வெளிவர உள்ள இந்தப் படம் இந்திய அளவில் பிரம்மாண்டமாகத் தயாரான படம் என்ற பெருமையப் பெறும் என்று இப்போதே பேசி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே