அப்போது அவர் தனது நண்பர் சூரஜ் பஞ்சோலி (வயது 21) கடைசியாக பேசியது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜியாகான் எழுதியதாக அவரது பெற்றோர் ஒரு கடிதத்தை போலீசாரிடம் அளித்தனர். அதில், ‘இந்த கடிதத்தை நீங்கள் படிக்கும்போது நான் இந்த உலகத்தைவிட்டு சென்றிருப்பேன். நான் மனதளவில் நொறுங்கிவிட்டேன்’ என்று எழுதப்பட்டிருந்தது.இந்த கடிதம் யாருக்கு எழுதப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் சூரஜ் பஞ்சோலியை குறிப்பிட்டுத்தான் அவர் எழுதியிருப்பதாக அவரது தாயார் ரபியா கான் குற்றம் சாட்டினார். அதன் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி சூரஜ் பஞ்சோலியை கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணைக்கு பின் அவருக்கு நீதிமன்றம் கடந்த ஆண்டில் ஜூலை 1ம் தேதி ஜாமின் வழங்கியது. இதனிடையே தனது மகளின் சாவு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை உயர்நீதிமன்றத்தில் ரபியா வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கு தொடர்பாக தனது 447 பக்க குற்றப்பத்திரிக்கையை மும்பை காவல்துறை கடந்த ஜனவரி 16ம் தேதி தாக்கல் செய்தது. இந்த சூழலில் தற்போது இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே