நடிகை காஜல் அகர்வாலின் அழகு ரகசியம்!…

சென்னை:-பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அந்தப் படம் வெளிவந்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் அப்போது எப்படி இருந்தாரோ அப்படியேதான் இன்று வரை இருக்கிறார். ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் சரியான உடலமைப்பில் அவருடைய அழகை அவர் பராமரித்து வருகிறார்.

தமிழை விட தெலுங்கில் காஜல் அகர்வாலுக்கு வரவேற்பு அதிகம். அதோடு ஹிந்திப் படங்களிலும் நடித்து அங்கம் புகழ் பெற்று விட்டார். சமீபத்தில் விஜய்யுடன் ‘ஜில்லா‘ படத்தில் ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.தன்னுடைய அழகு ரகசியம் என்ன என்பதை காஜல் அகர்வாலே கூறுகிறார். எனக்கு பெங்காலி ஸ்வீட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டேன். ஐஸ் க்ரீம் என்றால் அவ்வளவு ஆசை. இவையெல்லாம் வழக்கமாக நான் சாப்பிடும் ஐயிட்டங்கள். அப்புறம் ஹைதராபாத் பிரியாணி என்றால் ரொம்பவே பிடிக்கும். மதிய உணவு நேரத்தில் எனக்கு கண்டிப்பா பிரியாணி இருக்க வேண்டும். எப்போதெல்லாம் ஹைதராபாத் வருகிறேனோ, அப்போது பிரியாணி சாப்பிடாமல் இருக்க மாட்டேன், என்கிறார்.

இவ்வளவு சாப்பிட்டும் எப்படி குண்டாகாமல் இருக்கிறார் என்கிறீர்களா, அதற்கும் பதில் வைத்திருக்கிறார். நான் நிறையவே சாப்பிடுவேன். இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருக்க மாட்டேன். யோகா, ஏரோபிக் இவற்றோடு கார்டியோ உடற்பயிற்சிகளையும் செய்வேன். உடற்பயிற்சி செய்யறதுல ரொம்பவே கவனமா இருப்பேன் என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago