அஞ்சலி நடிக்கும் படத்தில் நடனமாடும் நடிகை ஸ்ருதி ஹாசன்!…

சென்னை:-தெலுங்கில் அஞ்சலி நாயகியாக நடித்து வரும் படம் ‘கீதாஞ்சலி’. ராஜ் கிரண் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தில் ஹர்ஷவர்தன் ரானே, பிரம்மானந்தம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமானவராக அஞ்சலி தான் இருப்பார் என அவருக்கிருக்கும் பிரச்னைகளுக்கிடையிலும் அவரையே நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். அஞ்சலி நடிக்காமல் போயிருந்தால் இந்தப் படம் அப்படியே நின்றிருக்கும் என அஞ்சலி புகழ் பாடுகிறார் படத்தின் எழுத்தாளரான கோனா வெங்கட்.

ஒரு த்ரில்லர் படமான இந்தப் படம் அஞ்சலிக்கு திருப்புமுனையாக அமையும் என்கிறார் கோனா வெங்கட். அனுஷ்காவிற்கு எப்படி ‘அருந்ததி’ அமைந்ததோ, ஜோதிகாவுக்கு எப்படி ‘சந்திரமுகி’ அமைந்ததோ, அது போல அஞ்லிக்கு இந்தப் படம் அமையும் என்கிறார். முதல் முறையாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்கிறார் அஞ்சலி. இந்தப் படம் மூலம் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றும் நம்புகிறார். நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம் பெற உள்ள ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றமாக நடனம் ஆடுமாறு நடிகை சமந்தாவிடம் கேட்டுள்ளார்கள். ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே, அந்த குறிப்பிட்ட பாடலில் நடனமாட ஸ்ருதிஹாசன் சம்மதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். அந்த பாடலில் அவருடன் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தமும் நடிக்க உள்ளாராம். அஞ்சலி நடிக்கும் படத்தில் ஸ்ருதி நடனமாடவிருப்பது ஆச்சரிய அலைகளை உருவாக்கியிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago