தமிழ் படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்தார். டைரக்டர் களஞ்சியம் தனது ‘‘ஊர் சுற்றி புராணம்’’ படத்தை முடித்துக் கொடுக்காமல் அஞ்சலி வேறு படங்களில் நடிக்க கூடாது என்றும் மீறி நடித்தால் கோர்ட்டு போவேன் என்றும் எச்சரித்தார். களஞ்சியத்தின் எதிர்ப்பை மீறி இன்று சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அஞ்சலி கலந்து கொண்டார்.
சாலிகிராமத்தில் உள்ள ஸ்டூடியோவில் ஜெயம் ரவியும், அஞ்சலியும் இணைந்து நடித்த காட்சிகளை டைரக்டர் சுராஜ் படமாக்கினார்.
பின்னர் அஞ்சலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:–
தமிழ் படத்தில் 2 வருடங்களுக்கு பிறகு நடிக்கிறேன். டைரக்டர் சுராஜ் சொன்ன கதை பிடித்தது. எனக்கு கேரக்டர் சிறப்பாக இருந்தது. காமெடி வேடத்தில் வருகிறேன். என்னைப்பற்றி நிறைய வதந்திகள் வெளிவந்தன. எனக்கு திருமணம் நடந்து விட்டது என்றும் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறேன் என்றும் செய்திகள் வெளியானது. நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. எனக்கு திருமணம் நடக்க வில்லை. தீராத வியாதியும் இல்லை.
டைரக்டர் களஞ்சியம் பிரச்சினை கோர்ட்டில் இருக்கிறது. எனவே அவர் சம்பந்தமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன். தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். எனக்கு மிரட்டல்கள் எதுவும் வரவில்லை. இங்கு சுமூகமாகத்தான் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. இதை நேரிலேயே நீங்கள் பார்க்கிறீர்கள்.
இவ்வாறு அஞ்சலி கூறினார்.
களஞ்சியத்தின் ‘‘ஊர் சுற்றி புராணம்’’ படத்தில் நடிப்பீர்களா? என்று கேட்ட போது, அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னது தானே பிரச்சினையாக உள்ளது’’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே